மாற்று எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல்துறையை சரியாக வழிநடத்தும், முதல் 10 மாநிலங்களில் தமிழகம் 3-ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பசுமை கட்டட கவுன்சில், இந்தியாவில் மாற்று எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல்துறையை சரியாக வழிநடத்தும் 10 இந்திய மாநிலங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டிருக்கிறது. அதில் ஒரு கட்டடத்தில் இருந்து குறைவான அளவு கார்பனை வெளியேற்றுதல், மாற்று எரிசக்தி வளங்களை பாதுகாத்தல், செலவினை குறைத்தல், பாதுகாப்பான சூழலை மேம்படுத்துதல் போன்ற பண்புகளின் கீழ், தரச்சான்றிதழ் வழங்குகிறது. அந்தப்பட்டியலில் தமிழகம் 157 தரமான பணிகளை மேற்கொண்டு, 3ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
Discussion about this post