சதுரகிரி அருள்மிகு சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலில் மார்கழி முதல் நாள் அன்று நடைபெறும் பூஜையில் ஆயிரத்து 500 பக்தர்கள் கலந்துக்கொள்ள அனுமதி அளித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பட்டுக்கோட்டையைச் சேர்ந்த முரளிகணேஷ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ஆண்டுதோறும் 30 ஆயிரம் ரூபாயை சதுரகிரியில் உள்ள அருள்மிகு சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவில் செயல் அலுவலரிடம் செலுத்தி சிறப்பு பூஜையும், அன்னதானமும் வழங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு அனுமதி கோரி அதிகாரிகளிடம் மனு அளித்து நீண்ட நாட்கள் ஆகியும் உரிய பதில் கிடைக்கவில்லை என தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சசிதரன், ஆதிகேசவலு அமர்வு, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலில் மார்கழி முதல் நாள் நடைபெறும் பூஜையில் ஆயிரத்து 500 பக்தர்கள் கலந்துக்கொள்ள அனுமதி அளித்தனர்.
மேலும் மாலை 4 மணிக்கு மேல் பக்தர்கள் யாரும் மலை ஏறக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளனர்.
Discussion about this post