தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி இளங்கலை பட்டப்படிப்பில் அரசு மருத்துவ கல்லூரியில் 61 இடங்களும், தனியார் மருத்துவ கல்லூரியில் 429 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என மொத்தம் 490 இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு, தனியார் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தியது. அதில் அரசு கல்லூரிகளில் சித்தாவில் 24 இடங்களும் , ஆயுர் வேதாவில் 3 இடங்களும் , ஹோமியோபதியில் 7 இடங்களும், யுனானியில் 27 இடங்களும் காலியாக உள்ளன. அதேப்போன்று தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்களில் ஹோமியோபதியில் 272 இடங்களும், சித்தாவில் 24 இடங்களும் நிரப்பப்படாமல் உள்ளது. மேலும் அகில இந்திய ஒதுக்கீட்டில் 127 இடங்கள் காலியாக உள்ளது என்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் மொத்தமுள்ள 521 இடங்களில் 503 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அரசு கல்லூரிகள், தனியார் கல்லூரிகள், அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு என மொத்தம் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் பாரம்பரிய மருத்துவ படிப்பில் நிரப்பப்படாமல் உள்ளதாக இந்திய மருத்துவத்துறை தெரிவித்துள்ளது.
நடப்பாண்டில் பாரம்பரிய மருத்துவ படிப்பில் ஏறக்குறைய ஆயிரம் இடங்கள் நிரப்பப்படவில்லை !
-
By Web Team
- Categories: தமிழ்நாடு
- Tags: medical coursenot filledtamil naduthousand seatsTraditional
Related Content
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு !
By
Web team
February 14, 2023
தமிழ்நாட்டில் பட்டியலின மக்கள் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் - ஆளுநர் ஆர்.என்.ரவி
By
Web team
February 13, 2023
ஆன்லைனில் விளையாட்டில் ஏராளமான தமிழக இளைஞர்கள் தற்கொலை !
By
Web team
February 11, 2023
தமிழகத்தில் மறுசுழற்சி பிளாஸ்டிக்கில் உருவாக்கப்பட்ட கோர்ட்-ஐ அணிந்த பிரதமர்!
By
Web team
February 9, 2023
தமிழகத்தில் அதிவேகத்தில் பரவும் டைபாய்டு காய்ச்சல்!
By
Web team
February 8, 2023