கீழடி அகழாய்வு பணிகளைப் பார்வையிட அக்.13 வரை பொதுமக்களுக்கு அனுமதி

கீழடி அகழாய்வைப் பார்வையிட அக்டோபர் 13 ஆம் தேதி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் மதுரையில் கண்காட்சியாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய தொல்லியல் ஆலோசனைக் குழுவிடம் இருந்து ஆறாம்கட்ட அகழாய்வுக்கு அனுமதி வந்த பிறகு ஜனவரியில் மீண்டும் அகழாய்வு பணிகள் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. 

Exit mobile version