சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு 2 நாட்கள் தடைக்கு பின் பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் மாதந்தோறும் அமாவாசை, பெளர்ணமி, பிரதோஷ நாட்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த தொடர் மழை மற்றும், ஓடைகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக, சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதாலும், மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்ததன் காரணமாக கடந்த 2 நாட்களாக பிரதோச வழிபாட்டிற்கு பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வனத்துறை தடை விதித்திருந்தது. மேலும் 3 வது நாளான அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த நிலையில் ஓடைகளிலும் நீர்வரத்து குறைந்ததால், பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் அமாவாசையை முன்னிட்டு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Discussion about this post