காங்கிரஸ் – திமுக கூட்டணி ஊழலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணி என்றும் தமிழகத்துக்கு திமுக கூட்டணி அரசு துரோகம் இழைத்தது என்றும் பாஜக தேசியதலைவர் அமீத்ஷா குற்றம்சாட்டியுள்ளார். ஈரோ டெக்ஸ்வேலியில் நடைபெற்ற கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் கருத்தரங்கில் பாஜக தேசியதலைவர் அமீத்ஷா, கலந்து கொண்டு பேசினார். அப்போது ராகுலை பிரதமராக ஏற்க கூட்டணி கட்சியினரே தயங்குவதாக தெரிவித்தார்.
ஆனால் மற்றொரு பக்கம் பாஜக, வலிமையாக இருப்பதாகவும் தமிழகத்தில் பாஜக கூட்டணி விரைவில் அமையும் என்றும் அமீத்ஷா கூறினார். ஒருபக்கம் தலைமையில்லாத கொள்கையில்லாத ஊழல் பணத்தை பிரிக்கும் கூட்டணியும் மற்றொரு பக்கம் அனைத்து மக்களுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியும் இருக்கிறது என்றார்.
Discussion about this post