அதிமுகவின் கூட்டணி குறித்து, தலைமை மட்டுமே முடிவெடுக்கும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அமைத்திருக்கும் தேர்தல் கூட்டணியின் நிலை குறித்து, அதிமுகவைச் சேர்ந்த சிலர், தங்கள் தனிப்பட்ட கருத்துக்களையும், அரசியல் பார்வைகளையும், பொதுவெளியிலோ, ஊடகங்கள் வாயிலாக பேட்டிகளாகவோ தெரிவிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
அதிமுகவின் தற்போதைய கூட்டணி குறித்தும், தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய அரசியல் நடவடிக்கைகள் பற்றியும், அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தீர ஆராய்ந்து, அதிமுகவின் கொள்கைப்படி முடிவெடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நலப் பணிகளை திறம்பட ஆற்றி, அதிமுகவிற்கு பெருமை சேர்க்கும் வேலைகளில் மட்டுமே அதிமுகவினர் இப்போது ஈடுபட வேண்டும் என்றும், அதிமுகவின் அரசியல் நிலைப்பாடுகள் அனைத்தும், செயற்குழு, பொதுக்குழுவில் விவாதிக்கப்பட்டு, அதற்கேற்ப தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதை அதிமுகவினர் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
Discussion about this post