தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையமும் தன்னுடைய பணியைத் துவங்கியுள்ளது. இதன் பகுதியாக இன்று நண்பகல் 12 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அ.தி.மு.க, திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். அப்போது தேர்தலை சுமூகமாக நடத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்க உள்ளனர்.
Discussion about this post