இந்தியா மற்றும் சீனா இடையே அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். நாட்டையே இச்சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், சீனாவுக்கு இந்திய தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதற்றத்தை தணிக்க இருநாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன. பேச்சுவார்த்தை நடத்தினாலும், இந்தியாவுடன் சீனா மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. காணொலி காட்சி மூலம் நடைபெறும் இக்கூட்டத்தில் பல்வேறு கட்சியின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். நாட்டின் பாதுகாப்பு கருதி கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
Discussion about this post