லிபியா கடல் பகுதியில் தத்தளித்த பல்வேறு நாடுகளை சேர்ந்த 44 அகதிகளை ஜெர்மனி நாட்டை சேர்ந்த மீட்புக் குழுவினர் படகுகள் மூலம் மீட்டனர்.
சிரியா, லிபியா, பாகிஸ்தான், வங்கதேசம், கினியா ஆகிய நாடுகளை சேர்ந்த அகதிகள் புகழிடம் தேடி ஐரோப்பிய நாடுகளில் குடிபெயர்ந்து வருகின்றனர். அந்த வகையில், சிறிய படகில் பெண்கள் குழந்தைகள் உள்பட 44 பேர் மத்திய தரைக்கடலில் பயணத்தபோது லிபிய கடல் பகுதியில் தத்தளித்துள்ளனர். தகவலறிந்து வந்த ஜெர்மன் மீட்புக் குழுவினர் ஆலன் குர்டி மீட்பு படகின் உதவியுடன் நடுகடலில் தத்தளித்தவர்களை பாதுகாப்பாக மீட்டு நிவாரண முகாம்களுக்கு அழைத்து சென்றனர்.
உள்நாட்டு விவகாரங்களால் அகதிகளாக வெளியேறும் மக்கள் ஜெர்மன் மனித உரிமை அமைப்பின் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். அவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைப்பதுடன், அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளையும் மீட்பு குழுவினர் செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் 65 அகதிகளை ஜெர்மன் மீட்பு குழுவினர் மீட்டது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post