விராட் கோலிக்கு பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் புகழாராம்!

இந்தியாவின் பேட்டிங் ஜாம்பவானான விராட்கோலியை பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் பாராட்டியுள்ளார். அவரது பாராட்டுதலில் இந்தியாவின் ஜாம்பவான் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தலைசிறந்த வீரர் என்பதை நான் நம்புகிறேன். ஆனால், கேப்டன் பொறுப்பில் சச்சின் எதையும் சாதிக்கவில்லை. அதனால் கேப்டன் பதவியே வேண்டாம் என்று நிராகரித்தார். If I were Virat Kohli, I wouldn't have married during my playing days, says  Shoaib Akhtar | Cricket News | Zee News

அதேபோல இந்தியாவின் தற்போதைய ஜாம்பவான் விராட் கோலி இடையிடையே மிகவும் மோசமான ஃபார்மில் இருந்தார். அதனால் மிகவும் துவண்டு போயிருந்த அவர் இழந்த ஃபார்மை மீண்டும் மீட்டெடுத்து மன தைரியத்துடன் களத்தில் இறங்கி ஆட்சி செய்து வருகிறார். கோலியின் ஆட்டத்திறனைப் பார்த்தாலே அது நன்றாகத் தெரியும். என்னைப் பார்க்கும் நண்பர்கள் நீங்கள் கோலியை வெகுவாக பாராட்டியே வருகிறீர்களே என்பார்கள். நான் அவர்களிடம் திருப்பி சொல்வதெல்லாம், அவரைப் பாராட்டாமல் எப்படி இருக்க முடியும் என்பதுதான் என்று கூறினார்.

Exit mobile version