எங்க தல குறி வச்சா தப்பாது:மகிழ்ச்சியில் அஜித் ரசிகர்கள்

நடிகர் அஜித்குமார் மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றிப்பெற்று தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்குபெற தகுதி பெற்றுள்ளார்.

ரசிகர்களால்’தல’ என அழைக்கப்படும் அஜித்குமார்.திரைத்துறை மட்டுமல்லாமல் பைக் ரேஸ், கார் ரேஸ், போட்டோகிராஃபி, ஏரோ மாடலிங் என பல துறைகளில் கால் பதித்துள்ளார்.சமீபத்தில் என்.ஐ.டி மாணவர்களுடன் இணைந்து சிறிய அளவிலான ஆளில்லா விமானம் தயாரிப்பதற்கு வழிகாட்டியாக இருந்தார்.

தற்போது துப்பாக்கி சுடுதல் துறையிலும் தல அஜித் அசத்தி வருகிறார்..கோவையில் நடைபெற்ற 45வது மாநில அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிப்பெற்று தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.இந்த போட்டியானது மத்தியபிரதேசம் மாநிலம் போபாலில் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கிறது.மேலும் தல ரசிகர்கள் இவர் சர்வதேச அளவில் வெற்றிப்பெற வேண்டும் என சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version