ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் சிறப்பு பொருட்கள் மற்றும் பழங்கள் விற்பனை களை கட்டியுள்ளது.
ஆயுத பூஜை பண்டிகை வரும் திங்கள்கிழமை கொண்டாடப்பட உள்ளது. ஆயுத பூஜையின் போது பயன்படுத்தக்கூடிய பொறி, கடலை, அவல், நாட்டுச் சர்க்கரை, வாழைக்கன்று, பூசனிக்காய் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை சூடு பிடிக்கத்தொடங்கியுள்ளது. மொத்த வியாபாரம் மற்றும் சில்லரை வணிகத்திற்கு அதிக அளவில் பொது மக்கள் வாங்கிச் செல்கின்றனர். பழங்கள் விற்பனையை பொருத்தவரை, கொய்யாப்பழம் மற்றும் சாத்துகுடி பழம் சற்று விலை உயர்ந்து காணப்படுகிறது. நாளைய தினம் விற்பனை இன்னும் அதிக அளவில் இருக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Discussion about this post