ஜம்மு காஷ்மீரில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
பயங்கரவாத அச்சுறுத்தலை தொடர்ந்து காஷ்மீரில் உள்ள அமர்நாத் யாத்திரைக்கு வருகை தரும் பக்தர்களை உடனே சொந்த ஊருக்கு திரும்பி செல்ல மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. அப்பகுதியில் இருந்து வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் ராணுவ வீரர்கள் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், ஆகஸ்ட் 15-ம் தேதி வரையில் ஜம்மு காஷ்மீரில் விமான சேவை நிறுத்தி வைக்கப்படுவதாக ஏர் இந்தியா, இண்டிகோ விமான சேவை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
Discussion about this post