ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன் ஜாமீனை நீட்டிக்க கோரிய ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் மனு தொடர்பாக, செப்டம்பர் 3ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.
முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக கைது செய்யப்படுள்ள நிலையில் அண்மையில் ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், ஏர்செல் மேக்சிஸ் நிறுவனம் 3,500 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் வழங்கியதில், முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், அந்நிய முதலீட்டில் சட்ட விரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதனை தொடர்ந்து அமலாக்க துறை கைது செய்வதை தவிர்க்க ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது. அதன் கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், முன் ஜாமீனை நீட்டிக்க கோரி இருவரும் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு செப்டம்பர் 3 ஆம் தேதி பிறப்பிக்கப்படும் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதுவரை இருவரையும் கைது செய்ய தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post