மும்பையில் புறப்பட தயாராக இருந்த ஏர் இந்தியா விமானத்தில் இருந்து பணிப்பெண் ஒருவர் கீழே தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை ஏர் இந்தியா ஏஐ 864 விமானம் டெல்லிக்கு புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமானத்தின் கதவை மூடும் போது அதில் இருந்த பணிப்பெண் ஒருவர் தவறி கீழே விழுந்துள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த அவர் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Discussion about this post