மேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய பணியாளர்களை மீட்கும் பணியில் விமானப்படையினர், நீச்சல் வீரர்கள்

மேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்திற்குள் சிக்கிய 13 பணியாளர்களை மீட்கும் பணியில் விமானப்படையினர், நீச்சல் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேகாலயாவின் ஜைண்டியா மாவட்டத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்திற்குள் கடந்த 13-ம் தேதி தொழிலாளர்கள் சென்றுள்ளனர். அப்பொழுது அதன் அருகே ஓடும் லைடெயின் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுரங்கத்திற்குள் 70 அடி வரையில் நீர் சூழ்ந்து பணியாளர்கள் சுரங்கத்தின் உள்ளே சிக்கினர்.

இதையடுத்து தேசிய பேரிடர் மீட்புப்படையினர் கடந்த மூன்று வாரங்களாக அங்கு முகாமிட்டு, பணியாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்புப்பணியில் விமானப்படையினர் மற்றும் நீச்சல் வீரர்களையும் ஈடுபடுத்தவும், தேசிய பேரிடர் மீட்புப்படையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ராட்சத குழாய்கள் மூலம் சுரங்கத்தில் உள்ள வெள்ளநீரை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, சட்டவிரோதமாக செயல்படும் இந்த சுரங்கத்தின் பாதைகள் குறுகலாக உள்ளதால், தொழிலாளர்களின் நிலை குறித்து அறிந்து அவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version