வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல காற்று சுழற்சி காரணமாக வங்கக்கடலில் மழைமேகம் சூழ்ந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், வெப்ப சலனம் காரணமாக ஏற்பட்ட காற்று சுழற்சி, மத்திய வங்கக் கடல் பகுதியில் வலுவாக நிலை கொண்டுள்ளது. இதனால் காற்றழுத்தம் உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோரப் பகுதியில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்றும், கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post