நம்ம ஊர் திருவிழாக்கள் என்றாலே அனைவருக்கும் நியாபகம் வருது என்றால் டெல்லி அப்பளமும் பலருக்கு நினைவில் வருவது எது என்று கேட்டால் குறிப்பாக சிறுவர்களிடம் கேட்டால் ராட்டினத்தையே சொல்வார்கள். ஏனென்றால் ராட்டினதில் ஏறி விளையாடும் போதுதான் அந்த திருவிழாவே நிறைவு பெற்றமாறி இருக்கும். இந்த ராட்டினத்தின் மீதான ஆசை என்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பொதுவானது தான் என்று சுட்டி காட்டும் வகையில் பல்வேறு நாடுகளில் ராட்டினங்கள் வந்து விட்டன. அதில் ராட்சத ராட்டினங்கள் பல நாடுகளில் உள்ளன. அதில் குறிப்பாக, மிக மிகப் பெரிய ராட்சத ராட்டினம் எதுவென்றால் துபாயில் ஜுமைராவில் உள்ள அய்ன் துபாய் (Ain Dubai) எனப்படும் பகுதியில் அமைந்துள்ள ராட்டினம் தான்.
துபாயில் ராட்சத ராட்டினம்:
இந்த ராட்சத ராட்டினமானது துபாயில் ஜுமைராவில் அய்ன் துபாய் என்ற பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ராட்டினமானது புளூவாட்டர் எனப்படும் செயற்கை தீவில் 9ஆயிரம் டன் எடையில் ராட்டினமானது அமைக்கப்பட்டு உள்ளது. இதை அய்ன் துபாய் என்றே மக்கள் அழைத்து வருகின்றனர். ராட்டினமானது 130 அடி நீளமும், 65 அடி அகலமும் கொண்டது. ராட்டினத்தின் அச்சில் இருந்து வெளிபுற கம்பிகளை இணைக்க 192 தடித்த கம்பிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இந்த ராட்டினத்தை தரையில் இருந்து பார்த்தல் 689 அடி உயரம் கொண்டு உள்ளது. இந்த ராட்டினத்தை தலை நிமிர்ந்து பார்த்தாலே பலருக்கும் கிறுகிறுவென தலை சுற்ற ஆரம்பித்துவிடும். அய்ன் துபாய் ராட்டினத்தில் ஒரே நேரத்தில் 1400-ற்கும் மேல் நபர்கள் அமர்ந்து விளையாடலாம். இதில் சேர்ந்து செல்லும் நபர்களுக்கு கண்டிப்பாக மரண பயம் கண்ணில் தெரிய வாய்புள்ளது. சிலர் ரசிப்பார்கள், சிலர் பயத்தில் ரசிப்பார்கள் என்றும் சொல்லலாம். இந்த ராட்டினம் ஒரு முறை சுற்றி வர 48 நிமிடங்கள் ஆகும்.
2022- ஆம் ஆண்டு துபாயில் அக்டோபர் மாதத்தில் அய்ன் துபாய் என்ற பகுதியில் திறக்கப்பட்டது. இது மேலும் சுற்றுலா தளமாக மாறியது. மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. வெளிநாட்டில் இருந்தும் பலர் ஆர்வத்துடன் வந்து ராட்சத ராட்டினத்தில் பயணம் செய்து புதுவிதமான அனுபவத்தை பெற்றனர். இன்னிலையில் இந்த ராட்சத ராட்டினமானது தொடங்கிய சில மாதங்களிலேயே நின்று போனது. மார்ச் மாதம் 2022-ல் திடீரென ராட்டினம் செயல்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இது பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவல் வெளியாகியே ஓர் ஆண்டு நிறைவு பெற்ற நிலையில் இன்னும் ராட்டினம் செயல்படவில்லை என்பது தான் உண்மை. இது துபாய் மக்களுக்கு மட்டுமின்றி, சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கும் மிகுந்த ஏமாற்றம் அளித்துள்ளது.
மீண்டும் இயங்குமா ராட்டினம்?
இந்நிலையில் இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட பொழுது இனி ராட்டினம் செயல்படபோவதில்லை என்று தெரிவித்தனர். இந்த செய்தியை கேட்டு துபாய் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் ராட்சத ராட்டினம் இயக்கப்படுவதால் பெரிய அளவில் ஒலி மாசுபாடு ஏற்படுகிறது. அருகிலுள்ள கட்டிடங்கள் பாதிக்கப்படுகின்றன என்று பலரால் பேசப்படுகிறது. இந்த சூழலில் அய்ன் துபாய் ராட்சத ராட்டின செயல்பாடுகள் காலவரையற்ற வகையில் நிறுத்தப்படு உள்ளதாக நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ராட்டினத்தை சீரமைக்கும் பணிகள் நடைப்பெறுவதாக கூறப்படுகின்றன. ஆனால் இவர்கள் எல்லம் கூறுவது உண்மை தானா? அய்ன் ராட்டினமானது எப்போது இயங்கும்? அதன் பணிகள் நடைபெறுவது உண்மைதானா? என்ற பல்வேறு கேள்விகளோடு சேர்ந்து துபாய் ராட்டினம் மீண்டும் செயல்படாதா என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே நிலவுகின்றன.