எந்த தேர்தலை கண்டும் அதிமுக பயப்படாது என்றும், குறித்த நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும், அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். நாமக்கல்லில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டபோது, செய்தியாளர்களை சந்தித்த அவர், யார் யாரோடு சேர்ந்தாலும் கவலை இல்லை என்றும் அதிமுக மக்களை நம்பி இருக்கும் கட்சி என்றும் தெரிவித்தார்.
Discussion about this post