முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசிய திமுக எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஆ.ராசாவை கண்டித்து, கொங்கு பிரதான சாலையில் அதிமுக மகளிரணி மற்றும் நிர்வாகிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முதலமைச்சர் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வரும் ஆ.ராசா கண்டித்து அவரது உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்திய அவர்கள்,ஆ.ராசாவை கைது செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதேபோல், திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று திமுக தலைமைக்கு எதிராகவும், ஆ.ராசா மற்றும் திண்டுக்கல் லியோனியை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினார்.
Discussion about this post