நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தேசிய மருத்துவ ஆணைய மசோதா மக்களவையில் நிறைவேறிய நிலையில், மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் மசோதா தாக்கலின் போது நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தேசிய மருத்துவ ஆணைய மசோதா மத்திய அரசால் கடந்த முறை தாக்கல் செய்யப்பட்டு தோல்வியை தழுவியது.
இந்நிலையில் மக்களவையில் பெரும்பான்மை காரணமாக நிறைவேற்றப்பட்ட மசோதா, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, விவாதம் நடைபெற்று மசோதா நிறைவேறியது. தேசிய மருத்துவ ஆணையம் அமைந்தால் அகில இந்திய மருத்துவக் கவுன்சில் கலைக்கப்பட்டு தேசிய மருத்துவ ஆணையம் என்கிற புதிய அமைப்பு ஏற்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post