நான்கு ஆண்டுகளில் விவசாயிகள், பெண்கள், மாணவர்கள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் அத்தனைத் தரப்பினருக்காகவும் பல்வேறு துறைகளில் அதிமுக அரசு செய்துள்ள சாதனைகளை, ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் பட்டியலிட்டுள்ளனர்…
அதிமுக அரசின் சாதனைகள் குறித்து இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 16லட்சத்து 43ஆயிரம் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க் கடன் தொகையான12ஆயிரத்து 110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கூட்டுறவு வங்கிகளிலும், கூட்டுறவு சங்கங்களிலும் மகளிர் சுய உதவிக் குழுவினர் பெற்ற கடன்கள் தள்ளுபடி
50ஆண்டு கால காவேரி பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் காவேரி நீர் மேலாண்மை வாரியம் மற்றும் முறைப்படுத்த குழு அமைப்பு
விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும் வகையில் டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு
குடிமராமத்து திட்டத்தின் மூலம் ஆயிரத்து 132 கோடி ரூபாயில் 5ஆயிரத்து 586 நீர் நிலைகள் தூர்வாரி சீரமைக்கப்பட்டு நீர் நிலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர்
12லட்சத்து 51ஆயிரம் ஏழைப் பெண்களின் திருமணத்திற்காக ஒரு சவரன் தாலிக்கு தங்கத்துடன் 50ஆயிரம் ரூபாய் உதவித்தொகை
பெண்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் 3லட்சத்து 32ஆயிரத்து 460 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 45லட்சத்து 77ஆயிரத்து 484 மகளிருக்கு, 81ஆயிரத்து 52 கோடி ரூபாய் கடன் உதவி
உழைக்கும் மகளிருக்கு 25ஆயிரம் மானியத்துடன் 2லட்சத்து 85ஆயிரம் அம்மா இருசக்கர வாகனங்கள் 740 கோடி ரூபாய் மானியம்
பெண் அரசு ஊழியர்களின் பேறுகால விடுப்பு 3 மாதங்களாக இருந்தது 9 மாதங்களாக உயர்த்தி அறிவிப்பு உள்ளிட்டவைகளை பட்டியலிட்டுள்ளனர்.
மேலும், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் அவர்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு
பயிர்க்காப்பீட்டு திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு 9ஆயிரத்து 827 கோடி ரூபாய் இழப்பீடு
52லட்சத்து 31ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு 7ஆயிரத்து 322 கோடி ரூபாய் செலவில் மடிக்கணினி
கடந்த 10 ஆண்டுகளில் 59லட்சத்து 77ஆயிரம் மாணாக்கர்களுக்கு 2ஆயிரத்து 119கோடி ரூபாயில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளனர்.
விவசாயிகளின் 100ஆண்டுகால கோரிக்கையான காவிரி – வைகை – குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம் 14ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது
இதே போல் விவசாயிகளின் 60 ஆண்டு காலகனவுத் திட்டமான அத்திக்கடவு – அவினாசித் திட்டம் ஆயிரத்து 652 கோடியில் செயல்படுத்தப்பட்டு, 24ஆயிரத்து 468 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி கிடைக்க வழிவகை
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் விளையாட்டு வீரர்களுக்கு வேலை வாய்ப்பில் 3 சதவீத இடஒதுக்கீடு
கொரோனா ஊரடங்கு காலத்தில் 2கோடியே 1 லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு நியாய விலைக்கடைகளில் நான்கு மாதங்களுக்கு விலையில்லாமல் அத்தியாவசியப் பொருட்கள்
அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் கொரோனா நிதியுதவியாக ஆயிரம் ரூபாய்
அம்மா உணவகங்கள் மூலம் கொரோனா ஊரடங்கு காலத்தில் 2கோடியே 97 லட்சம் மக்களுக்கு விலையில்லா உணவு
கொரோனா பெருந்தொற்று காலத்திலும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது என கூறியுள்ளனர்.
ஏழை-எளிய மக்கள் வசிக்கும் இடத்தின் அருகிலேயே அவர்களுக்கு மருத்துவ வசதி கிடைக்க 2ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகள்
100 வறண்ட ஏரிகளுக்கு காவிரி உபரி நீரை நீரேற்று மூலம் நிரப்பும் திட்டம் 565கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு, 4ஆயிரத்து 238 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி
2லட்சத்து 38ஆயிரம் நெசவாளர்களுக்கு தொடர்ந்து விலையில்லா மின்சாரம்
முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத் தொகை 2லட்சம் ரூபாயிலிருந்து 5லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு 50 லட்சம் நோயாளிகள் பயன்
மீன் பிடி தடைக்காலத்தில் வழங்கப்பட்டு வரும் நிவாரணத்தொகையானது 2ஆயிரத்திலிருந்து 5ஆயிரமாக உயர்வு
மீன்பிடி குறைந்த காலத்தில் 4லட்சத்து 94ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு 247 கோடி ரூபாய் நிவாரணம்
பொதுமக்களின் நலன் கருதியும் நிர்வாக வசதிக்காகவும் 6 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதை நினைவுகூர்ந்துள்ளனர்.
இதுமட்டுமின்றி, அரசு ஊழியர்களுக்கு7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி ஊதிய உயர்வு மற்றும் அகவிலைப்படி உயர்வு
உயர்கல்வி படிக்கும் மாணாக்கர்களில், இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடம் பெற நடவடிக்கை
9லட்சத்து 69ஆயிரம் கல்லூரி மாணாக்கர்கள் இணைய வழி வகுப்பில் கலந்து கொள்ள இலவசமாக நாள் ஒன்றுக்கு 2 ஜி.பி. டேட்டா
பொதுமக்கள் தங்கள் குறைகளை 24மணி நேரமும் தெரிவிக்கும் வகையில் 1100 என்ற முதலமைச்சரின் உதவி மையம்
புதிதாக 11 அரசு மருத்துவக் கல்லூரிகள், 21 பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகள், 40 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடக்கம்
117 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளியாகவும், ஆயிரத்து 79 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளியாகவும், 604 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்வு
32புள்ளி 9 சதவீதமாக இருந்த உயர்கல்வி மாணவர் சேர்க்கை 49 சதவீதமாக உயர்வு
சென்னை, கோவை, மதுரை மாநகரங்களில் 848கோடியே 88லட்சம் ரூபாய் செலவில் இரண்டடுக்கு மேம்பாலங்கள் என அதிமுக அரசு செயல்படுத்தியுள்ள எண்ணற்ற திட்டங்களை பட்டியலிட்டுள்ளனர்.
இதுதவிர, நாட்டிற்கு பெருமை சேர்த்த பெருமக்கள், தமிழ் சான்றோர்கள், சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மணி மண்டபங்கள், நினைவுத்தூண்கள், அரங்கங்கள் அமைத்து பெருமைப்படுத்தியுள்ளதோடு,
அவர்களின் பிறந்த நாள் அரசுவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருவதாகவும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செலவமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் பெருமிதத்துடன் சுட்டிக் காட்டியுள்ளனர்.
Discussion about this post