கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அம்மா மினி கிளினிக்குகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.
முதலாவதாக கோவை சிங்காநல்லூர் நெசவாளர் காலனியில் அம்மா மினி கிளினிக்கை மக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். அப்போது பேசிய அமைச்சர் வேலுமணி, அனைத்து தரப்பு மக்களுக்கும் தரமான மருத்துவ வசதியை வழங்குவதில் அதிமுக அரசு உறுதியாக உள்ளதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, கோவை சிவானந்தா காலனியில் அம்மா மினி கிளினிக்கை மக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். விழாவில் பேசிய அமைச்சர் வேலுமணி, கோவை மக்களின் நீண்ட கால கோரிக்கைகள் அனைத்தும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறினார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் கிறிஸ்துவ மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர், கணவனை இழந்து வாழும் கிறிஸ்துவ சகோதரிகளுக்கு அதிமுக அரசு, கல்வி உள்ளிட்டவைகளில் முன்னுரிமை அளிப்பதோடு, பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருவதாக தெரிவித்தார். கோவையில் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பில் கிறிஸ்துவ சமுதாயத்திற்காக புதிதாக மயானம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Discussion about this post