சூலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரசாரம் மேற்கோண்டார்.
அதிமுக சார்பில் சூலூர் சட்டமன்ற வேட்பளராக போட்டியிடும் கந்தசாமியை ஆதரித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பட்டணம் புதூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், திமுகவை போன்று வாக்குறுதிகளை மட்டுமே கொடுக்காமல், அதிமுக அறிவித்த திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
பிரசாரத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பட்டணம் புதூரில் அமைக்கப்பட்டிருந்த தேர்தல் பணி அலுவலகத்தை கோகுல இந்திரா திறந்து வைத்தார்.
Discussion about this post