அதிமுக வெற்றிக் கூட்டணியில் தேமுதிக அதிகாரப் பூர்வமாக இணைந்தது. அந்தக் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனிடையே, அதிமுக – தேமுதிக கூட்டணி மாபெரும் வெற்றி கூட்டணி என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து உள்ளார்.
கூட்டணி தொகுதி பங்கீட்டுக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் 2011 ல் தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது போன்று, வரும் மக்களவைத் தேர்தலிலும் 40 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று கூறினார்.
Discussion about this post