விழுப்புரம் மாவட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு அரசு கொரோனா மரணங்களை மறைப்பதாக குற்றம்சாட்டி இருக்கிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களுக்கு தேசிய பேரிடர் சட்டத்தில் 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், இறப்பு சான்றிதழிலில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பை மறைக்காமல் குறிப்பிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆயிரம் சசிகலா வந்தாலும் அதிமுக-வை அசைக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படும் இயக்கமே உண்மையான அதிமுக என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை திமுக நிறுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளார். அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தமிழக அரசு செயல்பட கூடாது என்றும் சி.வி. சண்முகம் வலியுறுத்தி இருக்கிறார்.
அமைச்சர் பொன்முடி குற்றம்சாட்டிய பாடத்திட்டம் 2005-ல் எழுதப்பட்ட நிலையில், 2006ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த திமுக இதனை ஏன் மூடி மறைத்தது என கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழப்புகளை தமிழ்நாடு அரசு மறைக்கப் பார்ப்பதாக சி.வி.சண்முனம் குற்றம்சாட்டி இருக்கிறார். கொரோனா பாதிப்பை குறைத்துக்காட்ட நூற்றுக்கு 80 கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படுவதாக தெரிவித்துள்ள அவர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சத்தான உணவுகள் வழங்கப்படவதில்லை என்று புகார் தெரிவித்துள்ளார்.
Discussion about this post