ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மோகனின் வெற்றி பிரகாசமாக உள்ளது என்று, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் சம்பந்தமாக அதிமுக தலைமை தேர்தல் பணிமனையில் கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம், புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி, உள்ளிட்ட கூட்டணி கட்சிகளில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அமைச்சர்கள் காமராஜ், கடம்பூர் ராஜு ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், அதிமுக வேட்பாளர் மோகனை வெற்றி பெற செய்வது குறித்தும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரின் பிரசார திட்டம் குறித்தும் ஆலோசித்தனர்.