விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன், காணை ஒன்றிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும் 21ம் தேதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் அந்த பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் 5வது நாளில் காணை ஒன்றியத்திற்கு உட்பட 8 கிராம பகுதிகளில் முத்தமிழ் செல்வன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் முத்தமிழ்செல்வனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியின் போது அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளும் உடனிருந்தனர்.
Discussion about this post