சென்னை அடையாறில் உள்ள கிரவுன் பிளாசா ஹோட்டலில், மக்களவை தேர்தல் தொடர்பாக, மத்திய பியூஷ் கோயல், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். மக்களவை தேர்தலையொட்டி கூட்டணி கட்சிகள் மற்றும் தொகுதிகள் தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று நள்ளிரவு, மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, அன்பழகன், கழக இணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Discussion about this post