கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கூட்டுப் பண்ணை திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டன.
22 குழுக்களைச் சார்ந்த விவசாயிகளுக்கு டிராக்டர்கள், பவர் வீடர்கள், பவர் டிரில்லர், களை எடுக்கும் கருவி உள்ளிட்ட கருவிகள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே பயனாளிகளுக்கு கருவிகளை வழங்கினார். கன்னியாகுமரி மாவாட்டத்தில் 2018-19 ஆம் ஆண்டு மட்டும் இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் விவசாய உபகரணங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விவசாய உபகரணங்களினால் தங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று தெரிவித்த விவசாயிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
Discussion about this post