திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில், அக்னி நிவர்த்தி வேள்வி கலசாபிஷேகம் நிறைவுபெற்றது.
பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவிலில், கடந்த திங்கட்கிழமை விநாயகர் பூஜையுடன் தொடங்கிய அக்னி நிவர்த்தி, ஆயிரத்து 8 கலசாபிஷேகமானது, திங்கட்கிழமை மாலை ஒன்றாம் காலம் மற்றும் செவ்வாய் கிழமை காலை இரண்டாம் காலமும், மாலை மூன்றாவது காலமாகவும் யாக வேள்வி பூஜை நடைபெற்றது. அதனை தொடர்ந்து, தற்போது நான்காம் கால யாக வேள்வி அம்மன் சன்னதி முன்பு தங்க கொடி மரத்தின் அருகே, வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த யாக குண்டத்தில் 108 வகையான ஹோம திரவியங்களை சமர்பித்து, பிறகு பூர்ணாஹுதியில், பட்டு வஸ்திரம் சமர்பிக்கப்பட்டு, வேதங்கள் முழங்க மகாதீபாரதனை நடைபெற்றது.
Discussion about this post