நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் முடிந்த பிறகே காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்தெடுப்பது குறித்து விவாதிக்கப்படும் என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 54 இடங்களில் மட்டுமே வென்று, இந்த முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற முடியாமல் போனது. இத்தேர்தலின் படுதோல்விக்குப் பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்திருந்தார். ஆனால், ராகுல் காந்தியின் ராஜினாமா ஏற்கப்படவில்லை.
தொடர்ந்து ராகுல் காந்தி தனது முடிவில் உறுதியாக இருப்பதால், காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தை கூட்டி புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மாற்று கட்சியில் இணைந்து வரும் நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, தற்போது நடந்து வரும் மக்களவை கூட்டத்தொடரில் கவனம் செலுத்தி வருவதாகவும், இது முடிந்த பிறகே புதிய தலைவர் தேர்தெடுப்பது குறித்து விவாதிக்கப்படும் என கூறியுள்ளார்.
Discussion about this post