பெரியகுளம் பகுதியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மா விளைச்சல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதிகளில் விளையும் மாம்பழங்களுக்கு தனிச்சுவை உண்டு. செந்தூரம், பங்கனப்பள்ளி, ருமேனியா, காளையப்பாடி, காதர், அல்போன்சா உள்ளிட்ட மாம்பழ வகைகள் விளைவிக்கப்பட்டு வருகின்றன. இங்கு விளையும் மாம்பழங்கள், இந்தியாவின் பல மாநிலங்களில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. 20 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதாகவும் இதனால் எதிர்பார்த்த அளவு மகசூல் கிடைக்கும் என்றும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Discussion about this post