கொடைக்கானலில் இரண்டு மாதக்காலத்திற்குப் பிறகு கரடி நீர்வீழ்ச்சிப் பகுதிக்குச் செல்ல வனத்துறையினர் அனுமதியளித்துள்ளதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள கரடி சோலை அருவிக்குச் செல்லும் வழியில் வன விலங்குகள் நடமாட்டம் இருந்ததால் கடந்த இரண்டு மாதங்களாக அருவிக்குச் சுற்றுலாப்பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.
கடந்த சில நாட்களாகத் தொடர்மழை பெய்து வருவதால் அருவியில் நீர்வரத்து அதிகம் இருந்தாலும், அதனைச் சுற்றுலாப்பயணிகள் காணமுடியாமல் ஏமாற்றம் அடைந்துவந்தனர்.
இந்நிலையில், தற்போது வனவிலங்குகள் இந்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்ததாகக் கூறி வனத்துறையினர் சுற்றுலாப்பயணிகள் செல்ல அனுமதி அளித்துள்ளனர். இதனால் சுற்றுலாப்பயணிகள் அருவியில் ஆர்ப்பரித்துக்கொட்டும் நீரைக் காணவும் குளித்து மகிழவும் ஆவலுடன் வந்துசெல்கின்றனர்.
Discussion about this post