இத்தாலி நோக்கி சென்றுக் கொண்டிருந்த கப்பல் ஒன்று நடுக்கடலில் மூழ்கிய விபத்தில், ஆப்பிரிக்க புலம்பெயர்வோர் 54 பேர் பலியாகினர்.
ஆப்பிரிக்க புலம்பெயர்வோர் 54 பேர், மீன்பிடி படகு ஒன்றில் மத்தியதரைக் கடலில் இத்தாலி நோக்கி சென்று கொண்டிருந்தனர். துனிசியாவை நெருங்கும் சயமத்தில் படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இதில் படகில் பயணம் செய்த 54 பேரும் நீரில் மூழ்கி பலியாகினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கடற்படை அதிகாரிகள், கடலில் மிதந்த 19 உடல்களை மீட்டனர். மேலும், கெர்கென்னா தீவு பகுதியில் இரண்டு சிறுவர்கள் உள்பட 22 பேரின் உடல்கள் கரை ஒதுங்கியது. தொடர்ந்து அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலில் இருந்து மீட்கப்பட்ட உடல்கள் துறைமுக நகரமான சபக்சில் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு இதேபோன்று லிபியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு 86 ஆப்பிரிக்க புலம்பெயர்வோர் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post