இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கிழும் பெண்களின் மீதான பெண்களுக்கு எதிரான பல ஒடுக்கு முறைகள் நடந்துக் கொண்டேதான் இருக்கின்றது. இன்றளவும் பெண்கள் ஒவ்வொரு நிலைகளிலும் ஒவ்வொரு இடங்களிலும் பல இன்னல்களையும் பல சவால்களையும் சந்தித்துக் கொண்டே தான் உள்ளனர். 18ம் நூற்றாண்டில் பெண்கள் என்றால் வீட்டு வேலைகளுக்கும் மற்ற வேலைகளுக்கும் சரிவருவார்கள் என்று முடக்கி வைத்தார்கள். இந்த நிலை மெல்ல மெல்ல மாறி, 1850களில் தொழிற்சாலை, அலுவலகம் என பல்வேறு இடங்களில் பெண்கள் கால்பதிக்க தொடங்கினர்.
பெண்ணியப் புரட்சி..!
ஆண்களுக்கு நிகராக பெண்களும் எல்லா பணிகளை செய்தாலும் ஆண்களுக்கு இணையான ஊதியம் வழங்கபடவில்லை. ஆண்களுக்கு நிகராக பெண்கள் வேலை செய்தாலும் அவர்களின் உரிமையிலும், ஊதியத்திலும் தொடர்ந்து அநீதிகள் நடந்து கொண்டே தான் இருத்தது. இதனால் பெண்கள் 1910 ஆம் ஆண்டு மாபெரும் உரிமை மாநாட்டை டென்மார்க் நகரில் நடத்தினர். இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் ஒருவரில் முக்கியமானவர் ஜெர்மனி நாட்டை சேர்ந்த புரட்சி பெண் கிளாரா ஜெட்கின். பெண்களின் உரிமைக்காகவும், உணர்ச்சிக்காகவும் அனைவரையும் ஒருங்கிணைத்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் தான் கிளாரா. இதற்கு பின்பு உலகையே திரும்பி பார்க்க வைத்த புரட்சி என்றால் 1917-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற பெண் தொழிலாளர்கள் முன்னெடுத்த புரட்சி. இதன் விளைவாக அப்போதைய ரஷ்ய ஆட்சியே கவிழ்ந்தது என்பதனை அனைவரும் அறிவோம். இதனைத் தொடர்ந்து 1921-ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் போரட்டத்தை நடத்தினர். இந்தப் போராட்டதில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டரா கலந்து கொண்டார். இந்த போரட்டதின் விளைவாக தான் பிப்பரவரி மாதம் கடைசி ஞாயிற்று கிழமை பெண்கள் தினமாக கொண்டாடப்பட்டது. இப்படி வரலாறு இருக்க இன்னமும் சில நாடுகளில் பெண்களுக்கு எதிராக வன்முறைகள் நடந்து கொண்டேதான் இருக்கிறது. அதில் ஆப்கானிஸ்தான் முதன்மையான நாடு. ஏனெனில், ஆப்கனிஸ்தானின் தலைநகரமான காபூலில் பெண்கள் அழகு நிலையங்களில் வேலை பார்க்கவும் நடத்துவதற்கும் அந்நாட்டு அரசு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.
காபூல்: ஆப்கனில் நடந்தேறும் பெண்கள் அடக்குமுறை..!
ஆப்கானிஸ்தானில் அழகு நிலையங்களை பெண்கள் நடத்துவதற்கு எதிராக தடை விதித்து உள்ளது தொடர்பாக தலிபான் அரசின் துணை மற்றும் நல்லொழுக்க அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் “காபூல் மற்றும் பிற மாகாணங்களில் பெண்களால் நடத்தப்படும் அனைத்து அழகு நிலையங்களும் உடனடியாக தடை செய்யப்படுகிறது என்றும் உடனடியாக மூடப்படும் என்றும் அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விதியை மீறுபவர்களின் மீது கடும் நடவடிக்கை சட்ட ரீதியாக எடுக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளது. இந்த கட்டுபாடுகளும், விதிமுறைகளும் தாலிபான் நாட்டு மக்களுக்கு புதிதல்ல. ஏனெனில், தொடர்ந்து பெண்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் வகையிலும் பெண்கள் மருத்துவமனைகளில் செவிலியர்களாகவும், மருத்துவர்களாகவும் மட்டுமே தொடர்ந்து அனுபதிக்கப்பட்டு வருகின்றனர். தாலிபானை கண்டித்து ஐ.நா சபை பெண்களுக்கு எதிரான இந்த அடக்குமுறைகளை தொடந்து தாலிபான் செய்து வந்ததால் தலிபான் அரசாங்கத்தை அங்கீகரிப்பது என்பது சாத்தியமற்ற ஒன்றாகும் என்று தெரிவித்தது. இது குறித்து பெண்கள் உரிமை செயற்பாட்டாளர் ஜமிலா கூறும்போது, “தாலிபான்கள் பெண்களை மனிதர்களாகக் கருதவில்லை’’
இந்தகட்டுபாட்டினால் அழகு ஒப்பனையாளர்களின் நிலை அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கபடுமென்றும் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான அழகு கடை உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
Discussion about this post