தேனியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்கும் விதம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். வெளிமாநிலத் தொழிலாளர்கள் மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண உதவிகள் குறித்த அறிக்கையை கூட்டத்தில் அதிகாரிகள் சமர்பித்தனர்
Discussion about this post