ஆண்டிபட்டியில் தேர்தல் அலுவலர் தலைமையில் அனைத்துக் கட்சி முகவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தேனி நாடாளுமன்றத்திற்குட்பட்ட 6 தொகுதியின் வாக்கு எண்ணிக்கையில் கலந்துகொள்ளவிருக்கும் அனைத்துக் கட்சி முகவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விவிபாட் இயந்திரம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அதன் மூலம் வாக்குச்சீட்டுகள் சரிபார்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வாக்கு எண்ணிக்கையின் போது அதிக நேரம் ஆனாலும், ஒவ்வொரு சுற்றுகள் முடிந்த பின்பே அடுத்த சுற்றுகள் ஆரம்பமாகும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post