நான்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு நேர்காணல் நடத்தப்பட்டது. இந்தநிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கடந்த 18ஆம் தேதி தமிழகத்தில் உள்ள 38 மக்களவை தொகுதிகள் மற்றும் காலியாக இருக்கும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
Discussion about this post