ராமநாதபுரத்தில் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் வாக்குகள் பதிவு செய்யும் முறை குறித்து மாவட்ட ஆட்சியர் செய்முறை விளக்கம் அளித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில், நாடாளுமன்ற தொகுதி தேர்தல் குறித்த அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்யும்
முறைகள் குறித்து ஆட்சியர் செயல்முறை விளக்கம் அளித்தார். இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். பின்னர் பேசிய ஆட்சியர் வீரராகவ ராவ், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 15 லட்சத்து 52 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர் என்றும்பதற்றமான வாக்குச்சாவடிகள்
கண்டறியப்பட்டு அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்
Discussion about this post