மறைத்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனைக் கூட்டம், அதிமுக மருத்துவ அணி மாநில செயலாளர் வேணுகோபால் மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
மருத்துவ அணி சார்பில் அதிமுக தலைமை கழக அலுவலகத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதில் மருத்துவ அணி மாநில செயலாளர் வேணுகோபால், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். கூட்டத்தில் புதிதாக 5 மாவட்டங்களை உருவாக்கியதற்காக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Discussion about this post