நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை பாதுகாப்பான முறையில் நடத்துவது குறித்து, மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுடன் ஆலோசனை நடத்தினார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், விரைவில் தொடங்க உள்ளதாக குடியரசு துணை தலைவரும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடு, அவருடைய முகநூல் பக்கத்தில், அண்மையில் சூசகமாக தெரிவித்தார். மார்ச் 23ம் தேதியுடன் நிறைவடைந்த பட்ஜெட் கூட்டத்தின் கடைசி அமர்வு நடைபெற்ற 6 மாதங்களுக்குள், அடுத்த கூட்டத்தொடர் நடக்கவேண்டும் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்கும் உறுப்பினர்கள், தனிமனித இடைவெளியை பின்பற்றும் வகையில் இருக்கை வசதி உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்வதற்கு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுடன், 2 மணிநேரத்திற்கும் மேலாக அவர் ஆலோசனை நடத்தினார். மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய உறுப்பினர்களின் பதவியேற்பு விழாவுக்கு தேவையான முன்னேற்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
Discussion about this post