மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வரவேற்பு பலகைகள் வைப்பதை தவிர்க்க வேண்டுமென்று அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குறித்து இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சி நிகழ்ச்சிகளுக்கோ அல்லது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் இல்ல நிகழ்ச்சிகளுக்கோ வரவேற்பு பலகைகள் வைப்பதை தவிர்க்க வேண்டுமென்று கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் வரவேற்பு பலகைகள் வைப்பதை நிறுத்த வேண்டுமென்று அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஒரு சிலர் ஆர்வ மிகுதியில், விளைவுகளையும், கட்டுப்பாடுகளையும் அறியாமல் செய்யும் செயலால் மக்கள் பாதிப்புக்குள்ளாவதாக வெளியாகும் செய்தி வேதனை அளிப்பதாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் குறிப்பிட்டுள்ளனர்.
Discussion about this post