சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் அடக்கு முறைகளை கண்டித்து, ஐ.நா. பொதுகூட்டம் நடைபெறும் நியூயார்க் நகரில், பாகிஸ்தானுக்கு எதிராக வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் பலரது கவனத்தை ஈர்த்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டம் நியூயார்க்கில் நகரில் உள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தக்கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், கலந்து கொண்டு பேச உள்ளார். இந்நிலையில், பாகிஸ்தானில் சிறுபான்மையின மக்களுக்கு எதிராக நடைபெறும் அத்துமீறல்களை, உலக நாடுகளின் கவனத்துக்கு எடுத்துச்செல்லும் வகையில், நியூயார்க்கில் நூற்றுக்கணக்கான டிரக்குகள், டிஜிட்டல் விளம்பர பதாகைகளுடன் வலம் வந்தன. அந்த டிரக்குகளில் பாகிஸ்தானில் நடக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான அத்துமீறல்கள் குறித்த வாசகங்கள் இடம் பெற்று இருந்தன. அமெரிக்காவில் இருந்து செயல்படும் வாய்ஸ் ஆப் கராச்சி, அட்வோகேசி ஆகிய அமைப்புகள் சிறுபான்மையினர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் இந்த பிரசாரத்தை முன்னெடுத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
Discussion about this post