நியூயார்க்கில் இங்கிலாந்து, அமெரிக்க நாடுகளின் விமானப் படையினர் இணைந்து நடத்திய சாகச நிகழ்ச்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.
நியூயார்க் நகரில் உள்ள ஹட்சன் ஆற்றின் மேல் எஃப் 22 ராப்டர், எஃப் 35 லைட்னிங் 2, ஹாக் T1A ரக போர் விமானங்கள் வண்ணப்புகையை உமிழ்ந்தவாறு விண்ணில் சீறிப் பாய்ந்தன. இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளின் மீது அமெரிக்கா கொண்டுள்ள உறவின் வெளிப்பாடாக இந்த விமான சாகச நிகழ்ச்சி தொடர்ந்து பதினோராவது ஆண்டாக நடத்தப்பட்டு வருவதாக, இங்கிலாந்து விமானப்படையின் மக்கள் தொடர்பு அதிகாரி ஆண்டி மோர்டன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அடுத்த 2 நாட்கள் நியூயார்க் நகரில் சர்வதேச விமானக் கண்காட்சி நடக்க உள்ளது குறிப்பிடத் தக்கது.
Discussion about this post