இளம்பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிப் பலாத்காரம் செய்த வழக்கில், குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை விதித்துக் காரைக்கால் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2016ஆம் ஆண்டு காரைக்கால் மாவட்டம் குரும் பகரத்தைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரைப் பலாத்காரம் செய்துள்ளார். இதுதொடர்பாக அந்தப் பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மகேந்திரனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். காரைக்கால் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, குற்றவாளியான மகேந்திரனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும்,10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.
Discussion about this post