அண்ணாவின் 54 வது நினைவு தினத்தை யொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராசு வீதியில் உள்ள அண்ணா சிலைக்கு அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி. முனுசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஓசூர் அருகே நடைபெற்ற கலவரம் அரசின் செயலற்ற தன்மையை காட்டுவதாகவும், இளைஞர்களின் உணர்வுகளுக்கு தமிழக அரசு மதிப்பளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
Discussion about this post