சாதிக் பாட்ஷா மரணம் தொடர்பான வழக்கில், தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தென் சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் தெரிவித்தார்.
தென் சென்னை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன், துரைபாக்கம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரசாரத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைத்து மக்களவை தொகுதியிலும் அதிமுக கூட்டணி வெற்றிபெறும் என்று கூறியதோடு, துரைப்பாக்கம் பகுதியில் உள்ள மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சாதிக் பாட்சா மரணம் தொடர்பான வழக்கில், தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஜெயவர்தன் கேட்டுக்கொண்டார்.
Discussion about this post