அதிமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் ஏ.சி. சண்முகத்தை ஆதரித்து தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக, அதிமுக சார்பில் தொகுதி வாரியாக தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதில் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு, கழக துணை ஒருங்கிணப்பாளர் கே.பி.முனுசாமி மற்றும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையிலான குழு நியமிக்கப்பட்டுள்ளது.
குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கு, கழக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தலைமையிலான குழு நியமிக்கப்பட்டுள்ளது. வேலூர் சட்டமன்ற தொகுதிக்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையிலான குழு நியமிக்கப்பட்டுள்ளது.
கீழ்வைத்தியணான்குப்பம் சட்டமன்ற தொகுதிக்கு, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான குழு நியமிக்கப்பட்டுள்ளது. அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு, சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.
வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் பணிக்குழுவில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு, வரும் 22 ஆம் தேதி காலை 10 மணிக்குள் சென்று தேர்தல் பணிகளை தொடங்க வேண்டும் என கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Discussion about this post